செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (17:29 IST)

எடப்பாடி பழனிசாமி முக்கிய வேண்டுகோள் விடுத்த திருமாவளவன்..!

எடப்பாடி பழனிச்சாமி இந்த இடத்தை தனது சாதுரியத்தால் அடைந்துள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகியுள்ளார் என்பதை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இது குறித்து கூறிய போது ’சட்டபூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ளார் என்றும் இதில் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவு உள்ளது என்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்தார். 
 
இருப்பினும் அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுகிறேன் என்று கூறிய திருமாவளவன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்தனர் என்றும் சமூக நீதியை பாதுகாத்துள்ளனர் என்றும் அந்த வகையில் சமூகநீதிக்கு நேர் எதிரியாக உள்ள பாஜகவை தூக்கி சுமக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
பாஜகவை தூக்கி சுமப்பது அதிமுகவிற்கும் தமிழகத்திற்கும் நல்லது அல்ல என்றும் பாஜக தமிழகத்தில் காலூன்றினால் ஒட்டுமொத்த சமூக நல்லிணக்கமும் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva