வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (12:03 IST)

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சனாதன சக்திகள் சதி.. திருமாவளவன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்யப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் மக்கள் நலத்திட்டங்களை முடக்க வலதுசாரி சனாதன சக்திகள் சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிறு வாய்ப்பு கிடைத்தாலும் தமிழ்நாடு அரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் எதிராக திருப்புவதில் முனைப்பாக உள்ளனர் என்றும், கூலிக்கு கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்,.

மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள், கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைதுசெய்து தண்டிக்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இன்றுய்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த திருமாவளவன் அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் ஜாதி மதவாதிகளை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீட் விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்

மேலும் சாதிவாதிகளையும் மதவாதிகளையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க கோரி முதல்வரிடம் மனு அளித்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Edited by Siva