ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (08:18 IST)

நவம்பர் 1ம் தேதி, விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!

Thirumavalavan
நவம்பர் 1ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
அதிமுக ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுக ஆட்சி தொடங்கிய உடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாநில அரசுக்கு எதிராக அக்கட்சி எந்த ஒரு போராட்டமும் நடத்தவில்லை
 
இந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக தனது போராட்டத்தை நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து மொழிவழி தேசிய உரிமை நாளான நவம்பர் 1ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva