Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வெடிகுண்டு வீசி போலீஸ் இன்ஸ்பெக்டரை கொள்ள முயற்சி

attack
Last Modified வியாழன், 21 டிசம்பர் 2017 (10:11 IST)
சென்னை கூடுவாஞ்சேரி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றதாக ஒரு பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் மதுரவாயலைச் சேர்ந்த பெரிய பாண்டியன் என்ற காவல் ஆய்வாளர் ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அமைந்தகரை மார்க்கெட்டில் கொள்ளையனை பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனை கொள்ளையன் கத்தியால் குத்தினான். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனைத்தொடர்ந்து சென்னை கூடுவாஞ்சேரி - ஆதனூர் சாலையில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்த  இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், காரின் அருகே செல்ல முயன்றார். அப்போது அந்த கும்பல் இன்ஸ்பெக்டரை பார்த்து காரின் அருகில் வந்தால் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு, அவர் மீது வெடிகுண்டு வீச முயன்றனர். இருப்பினும் காரினருகே சென்ற போலீஸார், மூன்று பேரை கைது செய்தனர். காரிலிருந்து தப்பித்து ஓடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :