Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செல்லூர் ராஜுவுக்கு எதிராக தெர்மக்கோல் போராட்டம்: நீங்களுமா அவர கலாய்க்குறீங்க!

செல்லூர் ராஜுவுக்கு எதிராக தெர்மக்கோல் போராட்டம்: நீங்களுமா அவர கலாய்க்குறீங்க!

Last Modified: செவ்வாய், 16 மே 2017 (15:28 IST)

Widgets Magazine

சமீபத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால் ஆரம்பித்த வேகத்திலேயே பல்பு வாங்கி கைவிடப்பட்ட அந்த திட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


 
 
அதன் பின்னர் செல்லூர் ராஜூவின் தெர்மாக்கோல் திட்டத்தை கலாய்க்கு மீம்ஸ்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கியது. தொடர்ந்து செல்லூர் ராஜுவை கலாய்க்கும் விதமாக தெர்மாக்கோல் மீம்ஸ் வந்துகொண்டு தான் இருக்கிறது.
 
இந்நிலையில் மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு எதிராக தெர்மகோல் போராட்டம் நடத்தினர். நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்ததையடுத்து மதுரை பழங்காநத்தம் போக்குவரத்து பணிமனைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அடியாட்களை அனுப்பி மிரட்டி, அனுபவம் இல்லாத ஓட்டுனர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்க முயற்சித்தார் என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து செல்லூர் ராஜுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போக்குவரத்து ஊழியர்கள் தெர்மக்கோல்களை கைகளில் ஏந்தி போராட்டம் நடத்தினர். இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் நேர்மையான கோரிக்கைகளுடன் போராடி வருகிறோம் ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ அடியாட்களை பணிமனைக்குள் அனுப்பி, அனுபவமில்லாத ஓட்டுனர்கள், ஆட்டோ, வேன் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களை வைத்து குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
 
வைகை அணையில் தெர்மக்கோல் திட்டத்தில் செல்லூர் ராஜூ தோல்வியுற்றதை போல இதிலும் தோல்வி பெறுவார் என்பதை காட்டும் விதத்தில்தான் நாங்கள் தெர்மாகோல்களை கையில் ஏந்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமைச்சரின் மகன் கார் விபத்தில் பலி - அதிர்ச்சி வீடியோ

ஆந்திர மாநில அமைச்சர் பி.நாராயணின் மகன் நிஷித் நாராயணன் சமீபத்தில் நடந்த காரி விபத்தில் ...

news

விபச்சாரம் செய்த மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவர்..

தன்னுடைய மனைவியை கொலை செய்து, குக்கரில் சமைத்த கணவர், போலீசார் வந்ததும், தானும் கழுத்தை ...

news

பெண் குழந்தையே வேண்டாம் என கதறும் தாய்: 7 பேரால் நாசம் செய்யப்பட்டு மகள் கொலை!

ஹரியானா மாநிலத்தில் வேலைக்கு சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி பலாத்காரம் ...

news

இப்பவே தாங்க முடியலயே: வெயில் இன்னமும் அதிகமாகுமாம்!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி முதல் தொடங்கியது. தமிழகம் ...

Widgets Magazine Widgets Magazine