வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (10:11 IST)

தெர்மாக்கோல் திட்டம் தொடரும்: அதிரடிக்கு தயாராகும் அமைச்சர் செல்லூர் ராஜூ!

தெர்மாக்கோல் திட்டம் தொடரும்: அதிரடிக்கு தயாராகும் அமைச்சர் செல்லூர் ராஜூ!

வெயில் காரணமாக வைகை அணியில் இருந்து நீர் ஆவியாகி நீர் மட்டம் குறைவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோல் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். ஆனால் அந்த திட்டம் மிகப்பெரிய சொதப்பலாகி உடனேயே கைவிடப்பட்டது.


 
 
இதனையடுத்து தெர்மாக்கோல் திட்டமும், அமைச்சர் செல்லூர் ராஜூவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலுமாக செல்லூர் ராஜூவை கலாய்த்து மீம்ஸ்கள் வலம் வந்தன.
 
இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அண்டை மாநிலங்கள் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை தர மறுத்து வருகின்றன. அதனால் தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், வெயில் நேரத்தில் நீர் ஆவியாவதை தடுக்கவும் முயற்சி செய்தோம்.
 
அதன் ஒரு பகுதியாகவே தெர்மாக்கோல் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த தெர்மாக்கோல் திட்டத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அதற்கான முயற்சியை தொடர்ந்து செய்ய அதிகாரிகள் முன் வரவேண்டும்.
 
இந்த தெர்மாக்கோல் திட்டத்தை சில அதிகாரிகள் சொன்னதை வைத்துதான் தொடங்கினேன். ஆனால், சில குறைபாடு அதில் இருந்ததன் காரணமாக அன்றைய முயற்சி தவறாக முடிந்தது. ஆனால் வரும் காலத்தில் நீர் ஆவியாவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.