தெர்மாகோல் விவகாரம் ; சட்டபையில் செல்லூர் ராஜூ படும் பாடு....


Murugan| Last Modified சனி, 17 ஜூன் 2017 (14:15 IST)
சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜுவை திமுக உறுப்பினர்கள் தெர்மாக்கோல் விவகாரத்தில் நாள்தோறும் கிண்டலடித்து வருகின்றனர்.

 

 
அமைச்சர் செல்லூர் ராஜூ வெயில் காரணமாக வைகை அணையின் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் போட்டு மூடும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே பல்பு வாங்கி கைவிடப்பட்டது. அனைத்து தெர்மாக்கோல்களும் ஓரமாக ஒதுங்கியது கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது. மேலும், இந்த விவகாரத்தை வைத்து செல்லூர் ராஜூவை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில்  நெட்டிசன்கள் ஏராளமான மீம்ஸ்களை போட்டனர்.
 
இந்நிலையில், தமிழக சட்டசபை கடந்த 14ம் தேதி கூடியது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து பேச தொடங்கினார். அப்போது, திமுக உறுப்பினர்கள் தெர்மாக்கோல்.. தெர்மாக்கோல்.. என கத்தினர். இதையடுத்து சட்டசபையில் சிரிப்பொலி ஏற்பட்டது.
 
அதேபோல், நேற்று திமுக உறுப்பினர் எ.வ.வேலு பேசும் போது, விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். அவருக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பல்வேறு வகையில் சமாளித்து பேசினாரே தவிர, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
 
இதனால் ஆவேசம் அடைந்த துரைமுருகன், தனது இருக்கையில் இருந்து எழுந்து, இரண்டு காதிதங்களை எடுத்து தெர்மாக்கோல் விடுவது போல் விடுங்கள் என சைகையால் செய்து காட்டினார். அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் ‘தெர்மாக்கோல்’  ‘தெர்மாக்கோல்’ என சத்தம் எழுப்பினர். இதனால் அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :