திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (13:28 IST)

அய்யா.. பெட்ரோல், டீசல் வாங்க லோன் குடுங்க! – வங்கி முன்னால் திரண்ட இளைஞர்கள்!

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் வாங்க லோன் கேட்டு இளைஞர்கள் மனு கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேனி அல்லிநகர இளைஞர்கள் பெட்ரோல் வாங்க கடனுதவி செய்ய வேண்டும் என வங்கியில் மனு அளித்துள்ளனர். கல்விக்கடன், வீட்டுக்கடன் வழங்குவது போல பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவற்றை வாங்கவும் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்ற நூதனமான கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளது வைரலாகியுள்ளது.