வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 8 மே 2015 (10:18 IST)

அதிர்ஷ்டம் தரும் விளக்குமாறு அடி

தேனி மாவட்டம், ஆண்டிப்படி அருகே உள்ள அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழான்போது, விளக்குமாறால் அடி வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என பக்தர்களால் நம்ப்படுகிறது.
 
தேனி  மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மறவபட்டி அருள்மிகு முத்தாலம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழாவின் போது, அம்மனுக்கு கரகம் எடுத்து, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்து பொங்கல், மா விளக்கு ஏற்றி தீச்சட்டி எடுத்து ஆண்களும், பெண்களும் பயபக்தியோடு அம்மனை வழிபட்டனர். இந்த கோவிலில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடந்தது.
 
இந்திலையில், விழாவில் மாமன், மச்சான் உறவு முறை கொண்டவர்கள், பழைய விளக்குமாறால் ஒருவரை, ஒருவர் அடித்துக் கொள்ளும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் வழக்கம் போல், இந்த நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
 
இரண்டாம் நாளின் போது, மாமன், மைத்துனர் உறவுமுறை கொண்டவர்கள் கோயில் முன் கூடுவர். அப்போது, உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு வேஷமிட்டு பழைய விளக்குமாறால் ஒருவரை ஒருவர் அடித்து துவைத்து எடுத்துவிவார்கள்.
 
இதையே சாக்காக வைத்து சிலர் தனக்கு வேண்டப்படாதவர்களையும், மிக நெருக்கமானவர்களையும் போட்டு தாக்கும் சம்பவம் உண்டு. இது திருவிழா சடங்கு என்பதால், யாரும் இதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. உறவு முறை அல்லாதவர்களை இவர்கள் தாக்குவதில்லை.
 
இவ்வாறு வேடமிட்டு, விளக்கமாறால் அடித்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதற்காவே, இங்கு இருந்து தொழில் அல்லது சொந்த பயணமாக வெளியூர் சென்றாலும் சரி, வெளிநாடு சென்றாலும் சரி, உடனே திரும்பி வந்து ஆர்முடன் இந்த விழாவில் கலந்து  கொண்டு விளக்குமாறு அடி வாங்கி மகிழ்கின்றனர்.