செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (19:39 IST)

கோவிலை உடைத்து அம்மனின் தாலி திருட்டு! – சென்னையில் பயங்கரம்!

சென்னையில் பூந்தமல்லி அருகே உள்ள அம்மன் கோவிலில் புகுந்த மர்ம கும்பல் அம்மன் தாலியை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் செல்வகணபதி நகர் அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று மதியம் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி முதலியவற்றை திருடி சென்றுள்ளனர்.

காலையில் வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்படிருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் கோவில் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் திருடர்கள் பைக்கில் வந்து திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவற்றை ஆதாரமாக கொண்டு போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.