வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு!

கூடலூர் அடுத்துள்ள தமிழக - கேரளா எல்லையோர கிராமமான பாட்ட வலிருந்து வெள்ளேரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில் காலையில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் நேரத்தில் திடீரென சாலைக்கு புலி ஒன்று இறங்கி வந்தது.
 
சாலையின் குறுக்கே புலி வந்து நிற்பதை பார்த்த வாகனத்தியிருந்த பள்ளிக் குழந்தைகள் பயத்தில் கதறி அழுதனர். 
 
நல்ல வயது முதிர்ந்த புலி மிடுக்கான தோற்றத்தில் சாலையை கடந்து காட்டுக்குள் செல்வற்காக சாலையில் அங்குமிங்கும் ஓடியது.
 
அதை பார்த்த வாகன ஒட்டிகளும் பயணித்தவர்களும் பதற்றமடைந்தனர்.
 
சிறிது நேரத்தில் காட்டுக்குள் இறங்கிச் சென்றதும் நிம்மதியடைந்தனர்.