1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (20:59 IST)

150 கார்கள் திருடிய திருடனை... மடக்கிப் பிடித்த போலீசார்

கோவை மாவட்டம் பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது கார் சமீபத்தில் திருட்டுப்போனது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், வாகன தணிக்கையில் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல கார் திருடன் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது. 
 
மேலும்,இவர் கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட தென் மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடியதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.  தற்போது அவரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.