ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (20:54 IST)

ஆசிரியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞர் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் என்ற பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவன், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றும்  ஆசிரியை  ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி  உள்ளது. இங்கு ஏராளமான மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். 
 
இந்நிலையில் இன்று காலையில் அப்பள்ளிக்கு ஆசிரியை ஒருவருடன், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது,  இரு சக்கரவாகனத்தில் வந்த இளைஞர் ஒருவன், மாணவியின் அப்பா இறந்துவிடதாகக் கூறி அந்த மாணவியை தன் பைக்கில் ஏறிக்கொள்ளுமாறு கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர் மறுப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
 
இதனால் கோபம் அடைந்த இளைஞர், தன் கையில் வைத்திருந்த ஒரு கத்தியை எடுத்து ஆசிரியையின் கழுத்தில் வைத்து, அவரை மிரட்டி, மாணவியை அங்கிருந்து தனது பைக்கில் கூட்டிச் சென்றுள்ளான்.
 
பின்னர், ஆசிரியை கூச்சலிடவே அருகில் இருந்த மக்கள், பதறியடித்து ஓடிவந்து, அந்த இளைஞனை பிடித்து, அடித்து உதைத்தனர். மாணவியை எங்கே அழைத்துச்செல்கிறாய் என கேட்டதற்கு, எங்கள் இருவருக்கும் வீட்டில் திருமணம் செய்துவைக்க உள்ளனர் எனக் கூறியுள்ளார். அதனால் பொதுமக்கள் தர்ம அடுகொடுத்து, அவனை போலீஸில் ஒப்படைந்தனர். 
 
போலீஸார் அந்த இளைஞனின் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.