வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (09:46 IST)

தமிழக வழக்கறிஞர்கள் திடீர் முடிவு

தமிழக வழக்கறிஞர்கள் திடீர் முடிவு

வழக்கறிஞர் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் புதிய முடிவை எடுத்துள்ளனர்.
 

 
வழக்கறிஞர் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் வழக்கறிஞர்வ மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை வழக்கறிஞர் தொழிலில் இருந்து உடனே இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, அகில இந்திய பார்கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  சங்கத்தின் தலைவர் ஆர்.சி.பால்கனராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால், அவர் மீது குற்றம் இருந்தால், அது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு, பின்பு நடவடிக்கை எடுக்கலாம்.
 
ஆனால், சமீபகாலமாக, வழக்கறிஞர்களிடம் விளக்கம் கேட்காமலேயே அவர்களை தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்யும் போக்கை பார் கவுன்சில் செய்து வருகிறது. இது சட்டப்படி தவறு. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
 
எனவே, அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் புகார் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.