வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (23:27 IST)

ஆட்சியில் பங்கு கேட்பது தவறு இல்லை: விஜயதாரணி

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, காங்கிரஸ் கட்சி முக்கியக் கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும். அப்போது, ஆட்சியில் பங்கு கேட்போம். ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இந்த நிலையில், திருப்பூரில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயதாரணி செய்திகளிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கன்னியாகுமரியில் இருந்து பிரசாரம் செய்து வருகிறேன். இதற்காக, நான், துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியதற்காக போலீசார் என் மீது வழக்கு போட்டனர். ஆனால், அதையும் மீறி தொடர்ந்து பூரண மதுவிலக்கு பிரசாரம் செய்து வருகிறேன்.
 
ஒரே ஒருநாள் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுக்கின்றார்கள். ஆனால், அவர்கள்  பொது மக்கள் 5 ஆண்டுகள் சிறை வைத்துவிடுகின்றனர். இதை பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, காங்கிரஸ் கட்சி முக்கியக் கூட்டணி கட்சியுன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம். அப்போது, ஆட்சியில் பங்கு கேட்போம். ஆட்சியில் பங்கு கேட்கும் அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, ஆட்சியில் பங்குகேட்பதில் எந்த தவறும் இல்லை என்றார்.