வியாழன், 6 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (17:14 IST)

ஏபோலீஸ்.... நெஞ்சுல சுடு...வாகன திருட்டு வழக்கில் வாய்தாவிற்காக வந்திருந்த நபர் - மதுபோதையில் போலீசாரிடம் ரகளை!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செங்கம் பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு செங்கம் போலீசார் இருசக்கர வாகன திருட்டில் கைது செய்து செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நடந்து வருகின்றது
 
இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இன்று  வாய்தாவிற்க்காக வந்திருந்த தினகரன்  மது அருந்திவிட்டு நீதிமன்றத்தின் உள்ளேயே சரமாரியான கேள்விகளை எழுப்பி போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார் 
 
அப்பொழுது மது போதையில் இருந்த  தினகரன் நான் திருடன் தான் உங்களால் முடிந்தால் என்ன செய்வீர்கள் செய்யுங்கள் முடிந்தால் என் நெஞ்சிலே சுடுங்கள் என்று காவல்துறையினரை பார்த்து தகாத வார்த்தையை கூறி ரகளையில் ஈடுபட்டார்
 
பின்னர் நீதிமன்றத்தில் இருந்த  போலீசார் செங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர் இதன் பின்னர் விரைந்து வந்த செங்கம் போலீசார் தினகரனை தர என இழுத்துச் சென்றனர் நீதிமன்றத்தில் உள்ளே இருந்த போலீசாருக்கு சவால் விட்டு ரகளையில் ஈடுபட்ட  தினகரன் செங்கம் போலீசாரை கண்டு பொட்டி பாம்பாக அடங்கி வாய் பேசாமல் அமைதியாக அவர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றார