முஸ்லிம்கள் மனச்சாட்சிப்படி வாக்குபதிவு செய்வார்கள்: பக்கீர் முஹம்மது அல்தாபி


K.N.Vadivel| Last Modified திங்கள், 18 ஜனவரி 2016 (23:46 IST)
முஸ்லிம்கள் மனச்சாட்சிப்படி வாக்குபதிவு செய்வார்கள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிவித்துள்ளது.
 
 
இது குறித்து, ஈரோட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
திருச்சியில், ஜனவரி 31 ஆம் தேதி ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. முஸ்லிம்களின் மூட நம்பிக்கைக்கு எதிரான இந்த மாநாட்டில், தமிழகத்தில் இருந்து சுமார் 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கு கொள்வார்கள்.
 
சட்டசபை மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் போது, முஸ்லிம்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.
 
எனவே, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் நாங்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம். முஸ்லிம் மக்கள் தங்கள் மனச்சாட்சிப்படி வாக்குபதிவு செய்வார்கள் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :