திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (19:04 IST)

முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் சென்ற மேயர் மற்றும் ஆணையர்!

cm stalin , mayor priya, Commissioner
முதல்வர் ஸ்டாலினின் வாகனத்தில் மேயர் பிரியா மற்றும் ஆணையர் உள்ளிட்டவர்கள்   சென்ற புகைப்படம் பரவலாகி வருகிறது.

கடந்த 5 ஆம் தேதி  வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது., இதன் காரணமாக அதிகாலையில், புயலாக வலுப்பெற்றது. இது கிழக்கு கடற்கரை சாலையோரமாக  நள்ளிரவு 2:30 மணிக்கு கரையைக் கடந்தது. இதற்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது.

இதில், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து, காசிமேட்டியில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் அவர்களின்  பாதுகாப்பு வாகனமான காண்வாயில், மேயர் பிரியா, ஆணையர் சுகன் தீப் சிங் ஆகியோர் ஃபுட்போர்டில் நின்றபடி சென்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.