திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : வெள்ளி, 13 மே 2022 (23:55 IST)

பாலியல் சில்மிசம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

ஓசூரில் மூன்று வயது குழந்தையிடம் பாலியல் சில்மிசம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட இருதுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாம்ராஜ் என்கிற பாண்டி, (50) இவர் ஓசூர் சாந்தி நகரில் குடும்பத்துடன் வசித்து மேஸ்திரி வேலை செய்து வந்தார்
 
இந்த நிலையில் மேஸ்திரி பாண்டு ஓசூர் பகுதியில்  3 வயது பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
 
விசாரணையில், மேஸ்த்திரி பாண்டு குழந்தையிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓசூர் மகளீர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்