செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (20:13 IST)

காதல் மனைவியை கொடூரமாக வெட்டிய கணவன்…

சத்தியமங்கலத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியார் கணவன். பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி பலனின்றி உயிரிழந்தார்.

சத்தியமங்கலம் அடுத்த அக்கரைத்ததப் பள்ளியில் வசித்து வந்தவர் சாஸ்தா மூர்த்தி. இவரது மனைவி அமுதா.

இந்த தம்பதியர்க்கு பவித்ரா (23)என்ற மகள் உள்ளார். இவர் சில வருடங்களுக்கு மும் வீரமணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கடந்த 10 மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது குழந்தைப் பேறுக்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீரமணிகண்டனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சாஸ்தா மருமகன் மீது புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே  வந்த   வீரமணிகண்டன் தனது மாமனார் வீட்டிற்குச் சென்று அவரையும் , மாமியாரையும், காதல் மனைவியும் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்து வரும் போலீஸார் தப்பியோடிய வீரமணிகண்டன் மற்றும்  அவரது நண்பர்களையும் தேடி வருகின்றனர்.