செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 டிசம்பர் 2022 (19:10 IST)

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!

சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன் கொடுமை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வரும் 9 ஆம் வகுப்பு மாணவிக்கும் அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ள்து.
இதை அறிந்த சிறுமியின் தந்தை, அச்சிறுமிய பெற்ற மகள் என்று பார்க்காமல், அவரை மிரட்டி பல முறை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார்.

சிறுமியின் வயிறு பெரிதாக வளர்வதைப் பார்த்த தாய்,அவரை  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

சிறுமியிடம் விசாரித்ததில், தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளார். உடனே கொடூர தந்தையை கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Edited by Sinoj