செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 மார்ச் 2024 (10:46 IST)

பாம்பை கண்டு பதறி ஓடிய ஆவின் பணியாளர் தவறி விழுந்து பலி! – நாமக்கலில் சோக சம்பவம்!

Cobra
நாமக்கலில் நாகப்பாம்பு படமெடுத்து சீறி வந்ததால் பதறி ஓடிய ஆவின் மேலாளர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் வெட்டுக்காப்புதூரில் செயல்பட்டு வரும் ஆவின் பால் நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

வழக்கமாக வேலை முடிந்து மாலை நேரத்தில் வீட்டுக்கு புறப்படுவது போலவே அன்றும் வீட்டிற்கு செல்ல காரை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு சாரைப்பாம்பும், நாகப்பாம்பும் பிண்ணிக் கொண்டிருந்துள்ளன. ஒரு குச்சை எடுத்து அவற்றை விரட்ட அவர் முயன்றபோது நாகப்பாம்பு படம் எடுத்து சீறியுள்ளது.

இதனால் பயந்து போன அவர் அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடிக்க முயன்றபோது கால் தடுமாறி கீழே இருந்த கல்லில் தலை பலமாக மோதிக் காயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்பை விரட்ட முயன்று மேலாளர் உயிர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K