வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (12:33 IST)

தனது இரட்டை குழந்தைகளை பாலூட்டும்போது அணைத்து கொன்ற கொடூர தாய்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் திவ்யா தனது இரட்டைப் பெண் குழந்தைகளை பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.


 
 
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (39). இவரது  மனைவிதான் திவ்யா. 29 வயதான இவருக்கு அனுஷ்கா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில்  திவ்யாவுக்கு நாகர்கோவில் மருத்துவமனையில் மறுபடியும் இரட்டைப் பெண் குழந்தை பிறந்தது. தாய் வீட்டில் தங்கியிருந்தார்  திவ்யாவை அவரது கணவர், பெண் குழந்தை பிறந்த காரணத்தால் பார்க்க வரவில்லை. இதனால் மனவேதனையில்  இருந்ததாகவும், இந்த நிலையில்தான் அவரது இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு பால் குடிக்கும்போது இறுக்கி அணைத்ததால்  மூச்சு விட சிரமப்பட்டு, மூச்சுத் திணறி இறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.