1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 டிசம்பர் 2018 (18:32 IST)

கஜா புயலால் பாதித்த தம்பதியினர் : கடைசியில் மகனையும் விற்ற துயர சம்பவம்...

சில நாட்களுக்கு முன் நம் தமிழகத்தின்  டெல்டா பகுதிகளைப் புரட்டிப்போட்ட கஜா புயலின் கோர தாண்டவத்துக்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். டெல்டா பகுதி மக்களுக்கு உதவுதற்கு  ஏராளமானோர் தமிழகத்தின் மற்ற பகுதியிலிருந்து உதவிக்கரம் நீட்டினர். இன்னமும் அரசும், தொண்டு நிறுவனமும் பல்வேறு உதவிகள் செய்து வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி கஜா புயலால் எல்லாவற்றையும் இழந்துவிட்டனர். கடைசியில் தம் 12 வயது மகனை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் ஒரே மகனை நகையில் உள்ள பனங்குடி என்னும் இடத்தில் சந்துரு என்பவருக்கு சொந்தமான ஒப்பந்த நிலத்தில் கூலிக்கு பணியாற்றுவதற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இது குறித்து தகவல் அறிந்த குழந்தை பாதுகாப்பு மைய  அதிகாரிகள்  சிறுவனை மீட்டு தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளதாகவும் தெரிகிறது.