வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 12 மே 2019 (17:44 IST)

வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

நெல்லை மாவட்டத்தி உள்ள பாளையங்கோட்டை அருகே புதிதாக வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனர். இதில் திடீரென்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வீட்டை மேலப்பாட்டம் பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவர் கட்டி வந்த நிலையில் இரவில் அவரது வீட்டில் இருமுறை பலத்த வெடி சப்தம் கேட்டது.அதன் பின்னர் அருகில் இருந்த மக்கள் பதற்றத்துடன் அங்கு சென்று பார்தனர். இதில் வெடி  விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. பின்னர்  போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து சோதனை மேற்கொண்ட போலீஸார் அங்கு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பதை கண்டுபிடித்தனர்.
 
பின்னர் அந்த வீட்டில் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீஸார் விசாரணையில் கணேசனின் இரு மகன்கள் (சிவா,அருள் ) மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் இருப்பதைக் கண்டனர், 
 
தற்போது தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.