1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2017 (00:10 IST)

இந்தியாவின் மிகப்பெரிய வருமானவரி சோதனை தோல்வியில் முடிந்தது: திவாகரன்

இந்தியாவின் மிகப்பெரிய வருமானவரி சோதனை என்று கூறப்படும் சசிகலா குடும்பத்தினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனை குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை


 



இந்த நிலையில் சசிகலா குடும்பத்தின் முக்கிய பிரமுகர் திவாகரன் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே மிகப்பெரிய சோதனை எங்கள் குடும்பத்தில்தான் நடைபெற்றது, அதுவும் மிகப்பெரிய தோல்வியில் முடிவடைந்தது. இதுபோன்ற எந்த சோதனையாலும் எங்களை பணியவைக்கமுடியாது. எங்கள் பிணத்தைதான் பணியவைக்கமுடியும்.

வருமானவரித்துறை சோதனைகள் குறித்து அந்த துறையின் அதிகாரிகள் பதில் ஏதும் கூறாத நிலையில் சமூக வலைதலங்களில் வரும் தகவல்கள் பொய்யானது' என்று திவாகரன் கூறியுள்ளார்.