1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (16:13 IST)

தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது: பிரபல இயக்குநர்

perarasu
தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது என பிரபல இயக்குனர் பேரரசு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அஜித் நடித்த திருப்பதி, விஜய் நடித்த சிவகாசி உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் அக்னிபாத் திட்டம் குறித்து கூறியிருப்பதாவது:
 
அக்னிபாத் திட்டம் திட்டத்திற்கு எதிராக ரயிலை கொளுத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் அவர்கள் தேசத்துரோகிகள் 
 
தேச துரோகிகளை அக்னிபாத் திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. இது போன்ற வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து எவ்வாறு நாட்டை காப்பாற்றுவார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்