Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போராட்டம் திடீர் நிறுத்தி வைப்பு ஏன்?

வியாழன், 9 மார்ச் 2017 (22:37 IST)

Widgets Magazine

புதுக்கோட்டை அருகில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் கடந்த 22 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதியினர்களும், அனைத்து துறையினர்களும் ஆதரவு கொடுத்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் போராட்டத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தின


 


இந்நிலையில் இன்று இரவு முதல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். போராட்டக் களத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதால், தேர்வுகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளோம். 22 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில், எங்களுக்கு ஆதரவு தெரிவித்த பல்வேறு தரப்பு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,’’  என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் ஒரு தரப்பினர் இந்த போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து இன்னும் போராட்டக்களத்திலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

5 மாநில தேர்தல். வெற்றி பெறுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் ...

news

திடீர் விஐபிகளாக மாறிய ஆர்.கே.நகர் வாக்காளர்கள். பணமழை பெய்ய வாய்ப்பு

பொதுவாக ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதுதான் நடைமுறையாக ...

news

நான் செய்த முதல் தவறு இதுதான். தினகரனின் முதல் மேடை பேச்சு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஒரே ...

news

சசிகலாதான் முதல் எதிரி திமுக இல்லை: தீபா அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்த தீபா, எனக்கு சசிகலாதான் முதல் ...

Widgets Magazine Widgets Magazine