வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (09:07 IST)

ஆள் நான் தான் ஆனா வாய்ஸ் எனதில்ல - வழக்கம்போல் பல்டியடித்த எச்.ராஜா

ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா நான் அப்படி பேசவே இல்லை என வழக்கம்போல் பல்டி அடித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசினார். 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி எச்.ராஜாவிற்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வழக்கம் போல் எச்.ராஜா அந்த வீடியோவில் இருப்பது நான் தான். ஆனால் அதில் உள்ள குரல் என்னுடையது அல்ல கூறி விட்டார். யாரோ என்னை பழிவாங்க எடிட் செய்துவிட்டனர் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பல்டி அடித்துவிட்டார்.
 
தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ளிய போலீஸார், பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசியதற்காக நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிரப்பிக்கப்பட்ட எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் அவருக்கு பாதுகாப்பு மட்டுமே அளித்தனர்.
அதேபோல் நீதிமன்றம் தற்பொழுது எச்.ராஜா மீது வழக்குபதிந்துள்ளது. இப்பொழுதாவது அவர் கைது செய்யப்படுவாரா அல்லது பாதுகாக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.