திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (16:21 IST)

டிரைலர் நல்லா தான் இருந்தாலும், படம் கேவலமா இருக்கே!!! பாஜகவை படுமோசமாக விமர்சித்த தம்பிதுரை

சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். 
 
சமீபத்தில் பட்ஜெட் குறித்து பேசிய அவர் மத்திய பாஜக அரசு தற்பொழுது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜக தமிழகத்திற்கு இதுவரை ஒன்னும் செய்யவில்லை எனவும், பாஜக தமிழகத்தை அழிவை நோக்கி கொண்டு செல்லப்பார்க்கிறது எனவும் கூறினார்.
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  இத்தனை ஆண்டு காலம் ஒன்றுமே செய்யாத பாஜக தேர்தல் நெருங்கும், நேரத்தில் மக்களை, விவசாயிகளை காப்பாற்றுகிறேன் என கூறிவது நகைச்சுவையாக உள்ளது. டிரைலர் நன்றாக இருந்தாலும் படத்தில் ஒன்றும் இருக்காது, அதேபோல தான் இந்த பட்ஜெட்டும் என கடுமையாக விமர்சித்தார்.
 
ஏற்கனவே தம்பிதுரையின் கருத்திற்கு சப்பைகட்டு கட்டும் அதிமுகவினர், இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.