1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:34 IST)

கச்சத்தீவை மீட்க அதிமுக மட்டுமே மட்டுமே வழக்கு தொடர்ந்தது: தளவாய் சுந்தரம்..

Thalavai Sundaram
கச்சத்தீவை மீட்போம் என்று அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து மீனவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மட்டுமே நீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது என தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது கச்சத்தீவை மீட்க அதிமுக அரசு வழக்கு தொடர்ந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் கச்சத்தீவை மீட்பது தொடர்பாக அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் வழக்கு தொடரவில்லை என்றும் எனவே அந்த கட்சிகள் எல்லாம் கச்சத்தீவை மீட்போம் என மீனவர்களை ஏமாற்ற கூடாது என்றும் தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை ஆகியோர் கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர்கள் கச்சத்தீவை மீட்க இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த ஆதாரத்தை வெளியிட்டு அதன் பிறகு பேசட்டும் என்றும் தளவாய் சுந்தரம் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Edited by Siva