வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
 

 
அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு, உதவித் தொகையை ரூ.1000 -ல் இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மாற்றுத் திறனாளிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
மேலும், சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற அவர்களை போலீசார் கைது செய்து, வேப்பேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.
 
விடுதலை செய்யப்பட்ட அவர்கள் வேப்பேரி ஈ.வி.கே.எஸ்.சம்பத் சாலையில் மீண்டும் மறியல் செய்தனர்.
 
இதனையடுத்து, மாற்றுத் திறனாளிகளுடன் தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன்  பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
 
மேலும், இந்த சந்திப்பு குறித்து, மாற்றுத்திறனாளிகள் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஒரு ஏமாற்று வேலை என்று குற்றம் சாட்டினர்.
 
மேலும், தங்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.