திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (11:04 IST)

புயல் நிவாரண நிதியாக ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுங்கள்: முதல்வருக்கு ஆசிரியர்கள் வேண்டுகோள்

புயல் நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் புயல் மற்றும் கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள்  நிவாரண நிதியாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில்  புயல் நிவாரணத்திற்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது. புயலால் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

Edited by Mahendran