செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (16:12 IST)

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்!

Teacher
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதித் தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
 
இந்த தேர்வை 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுத உள்ளனர் என்றும் 15 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தேர்வு அட்டவணைகள் மற்றும் ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது