திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2022 (16:24 IST)

மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!

தர்மபுரி மாவட்டம் லிங்க்க நாயக்கனபள்ளி என்ற பகுதியில்   உள்ள அரசு உயர் நிலையில் பள்ளியில்  படித்து வரும் மாணவியின் கன்னத்தைக் கிள்ளிய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்பு கணிதத்தை தவறாக போட்டுள்ளார் மாணவி. ஆசிரியர் சேரன்(50) மாணவர்கள் முன்னிலையில்   மாணவியின் கன்னத்தைக் கிள்ளி முதுகில் தட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் போலீஸில் புகார் அளித்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.