வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (16:44 IST)

கொரோனா பாதிப்பிலும், ரூ.220 கோடிக்கு மது விற்பனை… – கே.எஸ்.அழகிரி வேதனை !

கொரோனா பாதிப்பிலும், ரூ.220 கோடிக்கு மதுவிற்பனை… – கே.எஸ்.அழகிரி வேதனை !

உலகையே கொரோனா என்ற வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.220 கோடிக்கு விற்பனை நடந்திருப்பது வேதனை அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ், தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது :

உலகம் முழுவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய , மாநில  அரசுகள் கடுமைய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நேற்று அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுக்காக்க அரசு மருத்துவமனைகளில் காட்டும் தீவிரம், தனியார் மருத்துவமனைகளில் காட்டவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை ; 60 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் இந்த நோய் தாக்கும் இளைஞர்களை தாக்காது என்ற புரிதல் உள்ளது. ஆனால் பேதமின்றி இந்த நோய் அனைவரையும் பாதிக்கும் என உலக சுகாதாரா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்புக்கான அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த 21 ஆம் தேதி சனிக்கிழமை மட்டும் டாஸ்மாக் விற்பனை ஒரேநாளில் ரூ.220.49 கோடி என்ற செய்திகள் வெளியாகிறது. சாதாரண நாளில் 70 முதல் 130 கோடி வரை விற்ற மதுமானம் , ஞாயிறு விற்பனை என்பதால் சனிக்கிழமை அன்று இத்தனை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா விற்பனை கூடமாக டாஸ்மாக் விளங்கி வருவதை மக்கள் விரோத அரசு என்று கூறாமல் மக்கள் நலன் சார்ந்த அரசு என்று கூற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.