ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (10:07 IST)

வாக்கு எண்ணிக்கை – மீண்டும் டாஸ்மாக்குக்கு லீவ் !

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க்ப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

ஆனால் தேர்தல் போன்ற பொது நிகழ்ச்சிகளின் போது நடைபெறும் தேவையில்லாத வன்முறைகளைத் தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.