திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (12:59 IST)

மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன: செந்தில் பாலாஜி

Senthil Balaji
அதிமுக ஆட்சியிலேயே மால்களில் டாஸ்மாக் கடைகள் கொண்டுவரப்பட்டன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
கோயம்பேடு வணிக வளாகத்தில் தானியங்கி மது இயந்திரம் நிறுவப்பட்டு இருப்பதாக வெளிவந்த செய்திக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனார். 
 
இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்பகுதியில் தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது என்று கூறினார். மேலும் சாலை பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போன்ற போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்றும் மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டன என்றும் தெரிவித்தார். 
 
டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சி நடத்தியது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
 
Edited by Mahendran