1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (15:37 IST)

தனியார் வசம் செல்லும் டாஸ்மாக் : விரைவில் அறிவிப்பு?

தமிழக அரசு கை வசம் உள்ள டாஸ்மாக் விரைவில் தனியார் மயமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
டாஸ்மாக்கிற்கு முன்பு மதுக்கடைகள் தனியார் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனவே, ஆளும் அரசுகள் அந்த உரிமையை தங்களின் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு ஒதுக்கி அவர்களை குஷிப்படுத்தி வந்தன. புரிதலின் படி சில கடைகள் எதிர்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதுதான் காலம் காலமாக நடந்து வந்தது. 
 
ஆனால், அதில் வரும் வருமானத்தை கணக்கிட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதை அரசே நடத்தும் என அறிவித்து டாஸ்மாக்கை கொண்டு வந்தார். தற்போது, தமிழக அரசுக்கு வருடம் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. 
 
இந்நிலையில், நாளை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று கோட்டையில் நடந்தது. அப்போது தன் கட்சிக்காரர்களை குஷிபடுத்த விரைவில் மதுபானக்கடைகள் தனியார் வசம் ஒப்படைப்பது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.