வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:53 IST)

கட்டி முடிக்கப்பட்ட பத்தே நாளில் இடிந்த பாலம்: தஞ்சையில் பரபரப்பு..!

தஞ்சையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அந்த பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் கட்டுமான பணிகள் உள்ள பாலங்கள் சாலைகள் ஆகியவை தரம் குறைந்து  இருப்பதாக எதிர்க்கட்சிகள் அவ்வப்போது குற்றம் காட்டி வருகின்றன என்பதும் இது குறித்த வீடியோக்களும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி 27வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பத்து நாட்களில் வடிகால் வாய்க்கால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. 3 யூனிட் மணல் ஏற்றி சென்ற லாரியின் பாரம் தாங்காமல் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மதுரை அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இதனை அடுத்து இந்த பாலத்தை கட்டிய காண்ட்ராக்டர் மற்றும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva