1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (10:22 IST)

ரூ.20 லட்சம் இழப்பீடு வேண்டும்: மதுபானத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம்

தஞ்சையில் மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ரூபாய் 20 லட்சம் கேட்டு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தஞ்சாவூரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தற்போது வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
இறந்த உடல்களை அவசர அவசரமாக ஏன் பிரேத பரிசோதனை செய்தார்கள் என்றும் காவல்துறை அவசரம் காட்டுவது ஏன் என்றும் இருவரின் மரணத்திற்கு உரிய காரணம் தெரியாமல் உலலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கிய நிலையில் தமிழக அரசின் மதுபான கடையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 
 
தங்கள் உறவினர்களின் மரணத்திற்கு காரணம் தெரிய வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்றும் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran