1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (13:58 IST)

ராம்குமாரின் தந்தையும் கொல்லப்படலாம் : தமிழச்சி பகீர் தகவல்

ராம்குமாரின் தந்தையும் கொல்லப்படலாம் : தமிழச்சி பகீர் தகவல்

சுவாதி கொலைவழக்கு தொடர்பாக தமிழச்சி என்பவர் முகநூலில் பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார்.


 

 
தற்போது, ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள அவர், இது போலீசார் நடத்திய திட்டமிட்ட கொலை என்று கூறி வருகிறார். மேலும், கருப்பு முருகானந்தம் என்பவர் ஏவிய கூலிப்படைகளில் ஒருவரான மணி என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்று கூறி வருகிறார். மேலும், ராம்குமாரோடு முடியாது.. கொலைகள் தொடரும் என்று கூறிவரும் அவர், சமீபத்தில் பிரான்ஸ் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
ராம்குமாருக்கும் சுவாதிக்கும் பேஸ்புக்கில் பழக்கம் இருந்ததாக முதலில் கூறினர். ஆனால், ராம்குமாரின் நண்பர்கள் லிஸ்டில் சுவாதியின் பெயரே இல்லை. அப்படியிருக்க எப்படி அவர்கள் நண்பர்களாக இருக்க முடியும்.
 
சுவாதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. இதற்கான ஆதாரங்கள், தமிழக போலீசாருக்கு பெங்களூரில் கிடைத்துள்ளன. ஆனால் அதை மறைத்து விட்டார்கள்.  சுவாதி இஸ்லாம் மதத்திற்கு மாற முயற்சித்தார். அவரது கொலையின் பின்னணி அவரது குடும்பத்தினருக்கும் கண்டிப்பாக தெரியும்.
 
ஆனால், ஒரு தலைக் காதல் என்று கூறி, அதில் ராம்குமாரை கைது செய்து, அவரை பேசவிடாமல் கழுத்தையும் அறுத்தார்கள். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்து உண்மையை சொன்னால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து அவரை கொலை செய்து விட்டார்கள்.
 
இந்த வழக்கில் தற்கொலை என்ற பெயரில் இன்னும் பல கொலைகள் நிகழும். ராம்குமாரின் தந்தை கொல்லப்படலாம். ஏன் நானே கூட கொலை செய்யப்படலாம். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.