செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (08:17 IST)

பிரான்ஸில் தமிழச்சி கைது?: ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பியதால் நடவடிக்கை?

பிரான்ஸில் தமிழச்சி கைது?: ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பியதால் நடவடிக்கை?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தவறான தகவலை தெரிவித்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரான்ஸில் உள்ள தமிழச்சி என்ற பெண் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.


 
 
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையிலும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் இருந்த ஜெயலலிதா குறித்து உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்து, வதந்தியை பரப்பினார் தமிழச்சி.
 
இதனால் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பெரும் அச்சம் நிலவியது. இதனையடுத்து அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்திய சட்டத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என மூன்றாம்தர வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார்.
 
இந்நிலையில் தமிழச்சி குறித்து டெல்லியில் உள்ள ஒரு பிரமுகர் பிரான்ஸ் தூதரகம் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில் பிரான்ஸ் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவல் என கூறப்படுகிறது.
 
காரணம் பிரான்ஸ் நாட்டு சட்டப்படி இவ்வாறு வதந்தி பரப்புபவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும், கைது நடவடிக்கை இருக்காதாம். வழக்கமாக ஃபேஸ்புக்கில் தீவிரமாக செயல்படும் தமிழச்சி கடந்த சில தினங்களாக பதிவுகள் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.