வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (15:47 IST)

உங்கள் தாத்தா வேலைவெட்டி இல்லாமல் இருந்தாரா? உதயநிதிக்கு தமிழிசை பதிலடி..!

செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு தமிழிசை போல வேலை வெட்டி இல்லாதவன் நான் இல்லை என உதயநிதி பதில் அளித்ததற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

13 ஆண்டு காலம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது உங்களது தாத்தா வேலை வெட்டி இல்லாமல் தான் இருந்தாரா என்று கூறியுள்ளார். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று நான் வந்துள்ளேன் என்றும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தான் நான் வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

என் அரசியல் அனுபவத்திற்கும் உதயநிதி அனுபவத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றும், உங்களுடைய அப்பா வேலை கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு வேலை இல்லை, ஆனால் எனக்கு எப்போதும் வேலை இருக்கும் என்பதை உதயநிதி புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

உதயநிதி இடம் ஆணவம் உள்ளது என்றும், பல அரசர்கள் தங்களின் இளவரசர்களால் அழிந்தது போல், தமிழகத்திலும் நடக்கும். உதயநிதியின் ஆணவத்தால் திமுகவை அழிந்து போகும் என்றும் அவர் சாபமிட்டார்.


Edited by Siva