திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (13:46 IST)

டிவிட்டரில் டிரெண்டாகும் #தமிழகவேலைதமிழருக்கே... குவியும் ஆதங்க கமெண்டுகள்

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
ஆம், தமிழ் தேசிய பேரியக்கமும் நாம் தமிழர் கட்சியினரும் சேர்ந்து இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். தமிழக வேலை தமிழர்களுக்கே இருக்க வேண்டும் என்பதை முன்னெடுத்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
நாம் தமிழர் கட்சியினர், இன்று மே 3, காலை 8 மணி முதல் "தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம் என பதிவு ஒன்றை போட்டிருந்தது. 
 
அதன் விளைவுதான் இப்போதைய டிரெண்டிங் ஹேஷ்டேக். #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ்டேட் உடன் #TamilNaduJobsForTamils என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. இவ்விரு ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வேலையிழந்தோர், பாதிக்கப்பட்டோர் என பலர் தங்களது ஆதங்களை பதிவிட்டு வருகின்றனர்.