திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (10:36 IST)

138 நகராட்சிகளில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை! – வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 138 நகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி 138 நகராட்சிகளில் 110 இடங்களுக்கான முன்னிலை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக 98 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.