Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதிய காற்றழுத்த தாழ்வு வெறும் மொக்க; மக்கள் பயப்பட வேண்டாம் - தமிழ்நாடு வெதர்மேன்

Pradeep John
Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (14:45 IST)
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மொக்கை என்றும் இதனால் எதிர்பார்த்த மழை இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் புயலால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் உருவாகியுள்ளது.
 
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மொக்க காற்றழுத்தம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்தம் நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. காற்றழுத்தம் ஆந்திரா கடற்பகுதியை நெருங்கும் போது அசாதாரன காரணங்களால் இந்த காற்றழுத்தம் பலவீனமடையும். ஆந்திரா நோக்கி நகரும் பொது அதிர்ஷ்டவசமாக ஒருநாள் மழை கிடைக்கலாம்.
 
ஆந்திராவை நெருங்கும்போது இந்த காற்றழுத்தம் வெறும் எலும்பு கூடாகதான் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இது தனது தனிப்பட்ட விளக்கம் என்றும் இந்திய வானிலை மையத்தின் அறிவிப்புகளை மக்கள் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :