செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (07:13 IST)

நாங்களும் எதுக்கும் சலச்சவங்க இல்ல: தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பெருமிதம்

ராமநாதபுரத்தை சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ ஷர்மிலா தமிழகத்தில் முதல் வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.
திருநங்கைகள் சமூகத்தில் பல்வேறு அவலங்களை தந்தித்து வருகின்றனர். வீட்டில் ஒதுக்கி வைப்பது, சமூகத்தில் ஒதுக்கி வைப்பது, வேலையின்மை, கல்வியின்மை என எல்லா பக்கமும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் தப்பான வழிக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் பிச்சை எடுத்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தியஸ்ரீ ஷர்மிலா தன் பெற்றோருடன் வசித்து வந்தார். தான் திருநங்கை என்பதை அவர் உணர்ந்ததும் அவரது குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய சத்தியஸ்ரீக்கு செங்கல்பட்டில் உள்ள மற்றொரு திருநங்கை ஆதரவு கொடுத்தார். 
 
சட்டப்படிப்பு முடித்திருந்த சத்தியஸ்ரீ, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பணி தொடங்குவதற்கு பதிவு செய்யவுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையை அவர் சேர்த்துள்ளார்.