7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை சீசன் முடிந்துவிட்ட போதும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. சமீபத்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.