வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (13:28 IST)

குன்னூர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – தமிழக காவல்துறை எச்சரிக்கை!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது குறித்து வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர்களது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் இருந்த கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்து குறித்து வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பல யூகங்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.

உண்மை தெரியும் வரை தேவையற்ற யூகங்களை ஏற்படுத்த வேண்டாம் என விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.